செய்திகள்

ஆம்பூர் அருகே பஸ் மீது டிராக்டர் மோதி 75 பேர் படுகாயம் - பெண் பலி

Published On 2019-01-29 22:13 IST   |   Update On 2019-01-29 22:13:00 IST
ஆம்பூர் அருகே பஸ் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 75 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

பேரணாம்பட்டில் இருந்து ஆம்பூர் நோக்கி தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டது. பஸ்சை டிரைவர் சிவநேசன் (வயது 52). ஓட்டி வந்தார். இவர் உள்பட 110 பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர்.

போச்சம்பட்டு கூட்ரோடு அருகே சென்றபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிராக்டர் மீது மோதி சாலை அருகே உள்ள புளிமரத்தில் மோதி நின்றது. இதில் டிரைவர் சிவனேசனின் கால்கல் துண்டானது. மேலும் 25 பெண்கள் உள்பட 75 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடுபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்களின் உதவியுடன் மீட்டனர். பின்னர் படுகாயமடைந்தவர்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 45 பேரும், நரியாம்பட்டு அரசு சுகாதார ஆஸ்பத்திரியில் 15 பேரும் அனுமதித்தனர்.

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். அங்கு பேரணாம்பட்டு மசிகம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மனைவி கோவிந்தம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News