செய்திகள்

கோதண்டராமர் சிலை கொண்டுசெல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Published On 2019-01-23 14:52 GMT   |   Update On 2019-01-23 17:32 GMT
ஊத்தங்கரை அருகே கோதண்டராமர் சிலை கொண்டுசெல்ல எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கோதண்டராமர் சிலை ஊத்தங்கரை நான்கு முனைசந்திப்பு வழியாக பெங்களூரு கொண்டு செல்ல இருக்கிறது.

இந்த நிலையில் சிலையை கொண்டுசெல்ல ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள அண்ணாசிலை ரவுண்டானா இடையூறாக இருப்பதாக கூறி அதனை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமையில், மாவட்ட செய்தி தொடர்பாளர், மாவட்ட பொருளாளர், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தண்ணீர் கொடுக்காத கர்நாடகாவிற்கு தமிழ்நாட்டின் கனிமவளம் மட்டும் வேண்டுமா? என முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை செய்து அனுப்பி வைத்தனர். 

பின்னர் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஊத்தங்கரை டி.எஸ்.பி.யிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News