செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Published On 2019-01-09 16:29 IST   |   Update On 2019-01-09 16:29:00 IST
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசு ஊழியர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு:

ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் மற்றும் தலைமை தபால் நிலையம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. ஊழியர்கள் பணிக்கு வராமல் இன்று 2-வது நாளாக புறக்கணித்தனர். அதே சமயம் அதிகாரிகள் வந்திருந்தனர். இதே போல் ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்துக்கும் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.

இதே போல் கனரா வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் இன்று செயல்படவில்லை.

ஊழியர்கள் வருகை இல்லாததால் பாங்கிகள் வெறிச்சோடி கிடந்தன.

இன்று 2-வது நாளாக பாங்கிகள் செயல்படாததால் நேற்று இன்றும் ரூ.600 கோடிக்கு பண பரிவர்த்தனை முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் பாங்கி ஊழியர்கள் 650 பேரும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 520 பேரும் தபால் அலுவலக ஊழியர்கள் 600 பேரும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்து உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News