செய்திகள்

திண்டுக்கல் அருகே ரெயில் முன் பாய்ந்து டெய்லர் தற்கொலை

Published On 2019-01-04 16:49 IST   |   Update On 2019-01-04 16:49:00 IST
திண்டுக்கல் அருகே ரெயில் முன் பாய்ந்து டெய்லர் தற்கொலை செய்து கொண்டார்.

கொடைரோடு:

திண்டுக்கல் அருகில் உள்ள கொடைரோடு தர்மாபுரியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது43). திருப்பூரில் தங்கி டெய்லர் வேலை பார்த்து வந்தார்.

தனது மனைவி கவுரி மற்றும் மகளுடன் வசித்து வந்த தர்மராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடைரோட்டில் உள்ள பெற்றோரை பார்க்க வந்தார்.

இன்று அதிகாலை தர்மாபுரி ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக வேதனையில் இருந்த தர்மராஜ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News