செய்திகள்

தவளக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிலம்பாட்ட வீரர் பலி

Published On 2019-01-03 16:45 IST   |   Update On 2019-01-03 16:45:00 IST
தவளக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிலம்பாட்ட வீரர் பலியானார். இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர்:

தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜாராமன்(வயது65), சிலம்பாட்ட வீரர். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார். இடையார்பாளையம் தனியார் கம்பெனி அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து ராஜாராமன் தவறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜாராமனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று மாலை ராஜாராமன் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News