செய்திகள்

மதுரை வண்டியூரில் போலி டாக்டர் கைது

Published On 2019-01-03 16:23 IST   |   Update On 2019-01-03 16:23:00 IST
மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரம் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாநகராட்சி நகர்நல பிரிவுக்கு புகார்கள் வந்தன.

இது குறித்து நகர்நல அதிகாரிகள் அண்ணா நகர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சம்பவத்தன்று சவுராஷ்டிரா புரம் பகுதியில் குறிப்பிட்ட கிளீனிக்குக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது ஆனந்தன் என்பவர் மருத்துவம் படிக்காமல் கிளீனிக் நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆனந்தனை கைது செய்தனர்.

Tags:    

Similar News