செய்திகள்

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது- அமைச்சர் காமராஜ் பேட்டி

Published On 2018-12-30 11:29 GMT   |   Update On 2018-12-30 11:29 GMT
சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரத்தை சிலர் அரசியலாக்கி வருவது வேதனை அளிக்கிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #ministerkamaraj #HIVBlood #PregnantWoman

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரத்தை யாரும் நியாயப்படுத்த முடியாது. அந்த பெண்ணுக்கு தேவையான சிகிச்சைக்கு அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. பிறக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லாமல் இருக்க மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஆனால் இந்த விவகாரத்தை சிலர் அரசியலாக்கி வருவது வேதனை அளிக்கிறது. இந்த பிரச்சினையில் அரசியல் செய்யக்கூடாது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் 10 சதவீதம் மட்டுமே மின்சாரம் வழங்க வேண்டி உள்ளது. களிமண் சார்ந்த வயல் பகுதியில் மின்கம்பம் நடுவது சவாலான பணியாக உள்ளது. சீரமைப்பு பணியின் போது இதுவரை 2 மின் ஊழியர்கள் இறந்துள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் சீரமைப்பு பணிக்கு சிலர் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தப்படும். இதில் தவறு நடந்திருந்தால் மின்வாரிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #ministerkamaraj #HIVBlood #PregnantWoman

Tags:    

Similar News