செய்திகள்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-12-29 16:29 GMT   |   Update On 2018-12-29 16:29 GMT
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜெயசித்ரா வரவேற்றார். செயலாளர் ஆனந்த் சங்கத்தின் கோரிக்கைகளை குறித்து விளக்கவுரையாற்றினார். நீதிமன்ற உத்தரவின்படி செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

இடமாறுதல் ஆணை பெற்ற 8 மாதங்களாகியும் விடுவிக்கப்படாத செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் ஏற்புடைய ஒரே மாதிரியான சீருடை அரசு வழங்க வேண்டும். சங்க மாநில நிர்வாகிகள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து பொருளாளர் விஷ்ணு நிறைவுரையாற்றினார். முடிவில் சரண்யா நன்றி கூறினார்.
Tags:    

Similar News