செய்திகள்

திருவள்ளூரில் விதிமுறை மீறிய வாகனங்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

Published On 2018-12-28 11:00 GMT   |   Update On 2018-12-28 11:00 GMT
திருவள்ளூரில் விதிமுறை மீறி வந்த 60 வாகனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

திருவள்ளூர்:

திருவள்ளூரில் சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுவருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் மிதமான வேகத்தில் செல்லு மாறு வாகன ஓட்டிகளுக்கு அவ்வப்போது போக்கு வரத்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருவள்ளூர் பகுதிகளில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து போக்குவரத்துக் கழக பறக்கும் படை போக்குவரத்து அலுவலர் மோகன், திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் தலைமையில் திருவள்ளூர் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பாண்டூர் அருகே வேகக் கட்டுப்பாட்டு கருவி மூலம் வாகனச் சோதனை மேற்கொண்டனர்.

இதில் சீருடை அணியாத டிரைவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஒட்டியது, ஓவர் லோடு, தகுதி சான்று, அனுமதி சான்று இல்லாமல், அதிவேகமாகவும், ஆவணங்கள் இல்லாமலும் விதிமுறை மீறி வந்த 60 வாகனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவி குமார், பெருமாள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News