செய்திகள்

ஆன்-லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

Published On 2018-12-26 15:00 GMT   |   Update On 2018-12-26 15:00 GMT
புதுவையில் ஆன்-லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி:

புதுவையில் சமீப காலமாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் லாட்டரி சீட்டு விற்ற பலர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று ஒதியஞ்சாலை போலீசாருக்கு அண்ணா சாலையில் சிலர் நின்று கொண்டு லாட்டரிசீட்டு விற்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சப்இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் 3 பேர் நின்று கொண்டு தங்களது செல்போனை இயக்கி கொண்டிருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை கண்டவுடன் தப்பி ஓடமுயன்றனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது செல்போன் மூலம் போலி 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் கோவிந்தசாலை அந்தோணியார் கொவில் தெருவை சேர்ந்தவர்கள் பெருமாள்(45), சங்கர நாராயணன்(43), தமிழக பகுதி ராயபுதுகுப்பம் பகுதியை சேர்ந்த சத்யராஜ்(37) என்பது தெரியவந்தது. மேலும் விசாரித்ததில் அவர்களுக்கு கோபி, நாகராஜ், செல்வா, குணா உள்பட 10க்கும் மேற்பட்டவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 ஆயிரம் பணமும், 3 செல்போன், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News