செய்திகள்

கண்ணமங்கலத்தில் செம்மரம் கடத்த திட்டம்- 2 பேர் கைது

Published On 2018-12-22 13:05 GMT   |   Update On 2018-12-22 13:05 GMT
கண்ணமங்கலத்தில் செம்மரம் கடத்த திட்டம் திட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேரை தேடி வருகிறார்கள்.

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் காட்டுக்காநல்லூர் நாமக்கார மலையடிவாரத்தில் ரோந்து சென்றனர்.

அங்கு கும்பலாக நின்று கொண்டிருந்த 5 பேர் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதில் இரண்டு பேர் மட்டும் பிடிபட்டனர். 3 பேர் தப்பி விட்டனர்.

பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது ஜமனாமருதூர் குமார் (36), இரும்புலி சத்யராஜ் (24) எனவும், அவ்வழியே வரும் பொதுமக்களை மிரட்டி, வழிப்பறி செய்து ஆந்திர மாநிலம் சென்று செம்மரம் வெட்டி கடத்தி வர திட்டம் திட்டியதாக தெரிவித்தனர்.

மேற்கண்ட 2 பேர் மீதும் கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய கொளத்தூர் அண்ணாமலை, இளங்கோ, இரும்பிலி பெருமாள் (எ) வெள்ளை பெருமாள் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News