செய்திகள்

சென்னையில் ஐ.ஐ.டி. மாணவர் திடீர் மாயம்

Published On 2018-12-03 15:08 IST   |   Update On 2018-12-03 15:08:00 IST
சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த ரிஷீக் ரெட்டி மாயமானதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து மாணவனை தேடி வருகிறார்கள். #StudentMissing
சென்னை:

சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வருபவர் ரிஷீக் ரெட்டி.

இவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 27-ந்தேதி சொந்த ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ரிஷீக் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரிஷீக் ரெட்டியின் தந்தை பிரபாகர் ரெட்டி அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து மாணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஐ.ஐ.டியில் இருந்து புறப்பட்டு சென்ற ரிஷீக் வீட்டுக்கு செல்லவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரிஷீக்கின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்புதுலக்கி வருகிறார்கள். அவர் கடைசியாக யாரிடம் பேசி உள்ளார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காதல் பிரச்சினை காரணமாக அவர் காணாமல் போனாரா? இல்லை வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #StudentMissing
 
Tags:    

Similar News