செய்திகள்
உத்தமபாளையம் அருகே தோழி வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயம்
உத்தமபாளையம் அருகே தோழி வீட்டிற்கு சென்ற இளம்பெண் மாயமானார்.
தேனி:
உத்தமபாளையம் அருகே அணைப்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி மகள் சுகந்தி (வயது17). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று தனது தோழியை பார்க்க செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார்.
ஆனால் சுகந்தி அங்கு செல்லவில்லை. இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மூர்த்தி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் இது குறித்து புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுகந்தி மாயமானாரா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையை என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.