செய்திகள்

கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் ஸ்கேன் எடுக்க கட்டணம் கிடையாது

Published On 2018-11-25 15:16 IST   |   Update On 2018-11-25 15:16:00 IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டிசம்பர் 15-ம் தேதிவரை ஸ்கேன் எடுக்க கட்டணம் வசூலிக்க கூடாது என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #Gajaaffecteddistricts #Scanchargeswaived
சென்னை:

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வீடு இடிந்து விழுந்தும், மரம் சாய்ந்தும் காயமடைந்துள்ளனர். இவர்களில் மிக சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சிகிச்சைக்கு செல்பவர்களிடம் ஸ்கேன் எடுப்பதற்கு அரசு மருத்துவமனைகள் கட்டணம் வசூலிப்பதாகவும் சமீபத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.



அடுத்தவேளை சோற்றுக்கு வழியறியாமல் நிர்கதியாக தவிக்கும் மக்களிடம் தயவு, தாட்சண்யம் காட்டாத அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் பரவ தொடங்கின.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #Gajaaffecteddistricts  #Scanchargeswaived
Tags:    

Similar News