செய்திகள்

கரூர் அருகே ரேசன்கடை, ஆவின் பால் நிலையம் - எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

Published On 2018-11-24 11:41 GMT   |   Update On 2018-11-24 11:41 GMT
கரூர் அருகே பல்நோக்கு மைய கட்டிடத்தில் ரேசன்கடை மற்றும் ஆவின் பால் நிலையத்தை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

கரூர்:

கரூர் மாவட்டம், பரமத்தி வட்டம், பவித்திரம் ஊராட்சி, பள்ளமருதப்பட்டி பகுதியில் பல்நோக்கு மைய கட்டடத்தில் பகுதிநேர நியாய விலைக்கடை மற்றும் ஆவின் பால் நிலையம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் த. அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அதனை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. கரூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் 583 நியாய விலைக் கடைகள் வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் 20 கிலோ விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. சிறு கனிம வள நிதி திட்டத்தின் கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பில் இப்பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் பகுதி நேர நியாய விலைக்கடை மற்றும் ஆவின் நிலையம் இன்று பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த பகுதி நேர நியாயவிலைக்கடை தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தது. இங்கு 341 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, மாவட்ட வழங்கல் அலுவ லர் மல்லிகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சீனிவாசன், தாசில்தார் பிரபு (அரவக்குறிச்சி), வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிக்குமார், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஏ.ஆர். காளியப்பன், மார்க்கண்டேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News