செய்திகள்

திண்டுக்கல் நகரில் விடிய விடிய மழை

Published On 2018-11-24 06:04 GMT   |   Update On 2018-11-24 06:04 GMT
திண்டுக்கல் நகரில் விடிய விடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். #Rain
திண்டுக்கல்:

திண்டுக்கல் பகுதியில் பொதுவாகவே வறட்சி அதிக அளவில் நிலவி வருகிறது. விவசாயத்திற்கு மட்டுமல்லாது குடிநீருக்காக பொதுமக்கள் காலி குடங்களுடன் அலைந்து திரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. கஜா புயலின் தாக்கத்தினால் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய புயல் சின்னத்தால் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் தொடங்கிய மழை திண்டுக்கல் நகரில் விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளான கொடைக்கானல், பழனி, நத்தம், செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் நகரில் 14.10 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. கொடைக்கானல் 1.2, பழனி 1, நத்தம் 7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். மழையுடன் குளிர்ந்த காற்று வீசுவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. #Rain

Tags:    

Similar News