செய்திகள்

ரெயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் கூடாது - ரெயில்வே மந்திரிக்கு முதல்வர் கடிதம்

Published On 2018-11-23 09:03 GMT   |   Update On 2018-11-23 09:06 GMT
ரெயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ரெயில்வே மந்திரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami #RailwayMinister
சென்னை:

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்  மூலம் நிவாரணப் பொருட்கள் வந்தவண்ணம் உள்ளன. சிலர் நேரடியாக நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்கின்றனர். சிலர் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புகின்றனர்.



இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு இன்று கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், தமிழகத்திற்கு ரெயில் மூலம் அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரளாவில் மழை வெள்ளத்தின்போது நிவாரணப் பொருட்களுக்கான சரக்கு கட்டணத்திற்கு விலக்கு அளித்ததுபோல், தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்சியர்களுக்கு நன்கொடையாளர்கள் அனுப்பும் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami #RailwayMinister
Tags:    

Similar News