செய்திகள்

அனுமதியின்றி மதுவிற்ற 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

Published On 2018-11-21 20:04 IST   |   Update On 2018-11-21 20:04:00 IST
தருமபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியில் அனுமதியின்றி மதுவிற்ற 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், ஏரியூர் பகுதியில் அனுமதியின்றி திருட்டு தனமாக வீடு மற்றும் கடைகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அதே பகுதியில் திருட்டு தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பழனியம்மாள், சின்னகண்ணு, முத்தம்மாள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி பெண்கள் சிறையில் அடைத்தனர்.  

இதேபோல் பெரும்பாலை பகுதியில் அனுமதியின்றி மது விற்ற செவந்தான் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News