செய்திகள்

பம்மல் அருகே 3 குப்பை லாரிகள் சிறைபிடிப்பு- பொதுமக்கள் போராட்டம்

Published On 2018-11-21 15:02 IST   |   Update On 2018-11-21 15:02:00 IST
பம்மல் அருகே ஏரியில் குப்பைகளை கொட்ட முயற்சித்த 3 லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த பம்மல் நகராட்சியில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. நேற்று இரவு 10 மணி அளவில் பம்மல் நகராட்சிக்கு சொந்தமான 3 குப்பை லாரிகள் திருநீர் மலை பேரூராட்சிக்குட்பட்ட ஏரி பகுதிக்கு வந்தன. பின்னர் அதில் இருந்த குப்பைகளை அங்கு கொட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏரியில் குப்பையை கொட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து 3 லாரிகளையும் சிறைபிடித்தனர். பின்னர் அவை திருநீர் மலை பேரூராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று இரவு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News