செய்திகள்
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு மணமக்கள் நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

திருமண விழாவில் பங்கேற்றோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிய மணமக்கள்

Published On 2018-11-14 07:45 GMT   |   Update On 2018-11-14 07:45 GMT
புதுவையை அடுத்த ஆரோவில் அருகே இன்று நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றோருக்கு மணமக்கள் நிலவேம்பு சகாயத்தை வழங்கினர். #NilavembuKashayam
சேதராப்பட்டு:

டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை தடுக்கும் வகையில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு டீ, காப்பிக்கு பதிலாக நிலவேம்பு கசாயத்தை மணமக்கள் வழங்கினர்.

புதுவையை அடுத்த ஆரோவில் அருகே சஞ்சீவி நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இசை கலைஞர். இவருக்கும், சென்னையை சேர்ந்த பட்டதாரி பெண்ணான கீர்த்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களது திருமணம் இன்று காலை திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

தாலி கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் மணமக்கள் மண்டப வாயிலில் நின்று விழாவில் பங்கேற்றவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர்.

அதனை அனைவரும் மறுக்காமல் வாங்கி பருகியதோடு மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். #NilavembuKashayam
Tags:    

Similar News