செய்திகள்

அமைந்தகரையில் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2018-11-13 06:11 GMT   |   Update On 2018-11-13 06:11 GMT
அமைந்தகரையில் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

பெங்களூரைச் சேர்ந்த தம்பதி சசிகாந்த் சைலஜா.இவர்கள் குழந்தையின்மை சிகிச்சைக்காக அமைந்தகரை வெற்றி விநாயகர் கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சிகிச்சைக்காக வீட்டை பூட்டிவிட்டு மருத்துவ மனைக்கு சென்றிருந்தனர். திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 10சவரன் நகை, லேப்-டாப், ரூ. 4 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.

இதுகுறித்து அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது கொள்ளையில் ஈடுபட்டது டி.பி. சத்திரம் நாலு அடுக்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சுரேஷ் என்கிற ஓலை சுரேஷ் என்பது தெரியவந்தது.

அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 10 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சுரேஷ் என்கிற ஓலை சுரேஷ் தனியாக சென்று வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பதில் கைதேர்ந்தவன்.

அவந் மீது டி.பி. சத்திரம், கீழ்பாக்கம், அண்ணா நகர் அரும்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே 9 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News