செய்திகள்

பணமதிப்பு இழப்பீட்டை கண்டித்து அரியலூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்- 50 பேர் கைது

Published On 2018-11-11 16:25 GMT   |   Update On 2018-11-11 16:25 GMT
பணமதிப்பு இழப்பீட்டை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் அரியலூரில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:

அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட  இ.காங்கிரஸ் சார்பில் பணமதிப்பு இழப்பீட்டை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி தர மறுத்ததால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

இதில்  மாவட்ட தலைவர் ஜி.ராஜேந்திரன், நகரதலைவர் சந்திரசேகர், வட்டார தலைவர் தியாகராஜன், கர்ணன், திருமானூர் பாண்டியராஜன், சீமான் மூப்பனார், தா.பழுர் சக்ரவர்த்தி, மாரிமுத்து, ஜெயங்கொண்டம் செங்குட்டுவன், நகரதலைவர் ஜாக்சன், ஆண்டிமடம் கொடியரசு, மாசிலாமணி, செந்துறை கொளஞ்சிநாதன், உடையார்பாளையம் ஜெயராமன், மாவட்ட பொருளாளர் மனோகரன், தொழிற்சங்கம்  சிவக்குமார், சேவாதளம் சிவா, மகிளா காங்கிரஸ் சின்ன பொண்ணு, மாரியம்மாள், தமிழரசி, தொகுதி தலைவர் திருநாவுக்கரசு  உட்பட 50 பேர் கலந்து கொண்டனர். 

அனுமதியை மீறி மறியலில் ஈடுபட்டதால் 50 பேரும் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News