செய்திகள்

கோத்தகிரி சாலையில் தேயிலை தோட்டத்தில் உலா வரும் கரடி

Published On 2018-11-09 14:32 GMT   |   Update On 2018-11-09 14:32 GMT
கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் பட்டபகலில் கரடி உலா வருவதால் சுற்றுலா பயணிகள், வாகன ஒட்டுநர்கள் கரடியை பார்த்து ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி கரடியை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையின் இடையே குஞ்சப்பண்னை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

இக்கிராமம் அடர்ந்த தேயிலை தோட்டம், காபி தோட்டம், வனப்பகுதியை ஒட்டிஅமைந்துள்ளன. இந்நிலையில் உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து பொதுமக்கள் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று குஞ்சப்பண்னை அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் பட்ட பகலில் கரடி ஒன்று உலா வந்தது. அப்போது கோத்தகிரி மேட்டுப்பாளையம் வழியாக வந்த சுற்றுலா பயணிகள், வாகன ஒட்டுநர்கள் கரடியை பார்த்து ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி கரடியை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

பின்னர் சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் கரடி அங்கிருந்து அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News