செய்திகள்

தருமபுரியில் தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு

Published On 2018-11-05 12:07 GMT   |   Update On 2018-11-05 12:07 GMT
தருமபுரியில் தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. 1 கிலோ குண்டு மல்லி ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி:

தருமபுரி டவுன் பேருந்து நிலையத்தில் பூ மார்கெட் அமைந்துள்ளது. இந்த பூ மார்கெட்டில் இன்று தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாளை தீபாவளி என்பதால் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பூக்களின் விலை விவரம் வருமாறு:-

குண்டு மல்லி 1 கிலோ ரூ.700க்கும், சன்ன மல்லி 1 கிலோ ரூ.600க்கும், ஜாதி மல்லி 1 கிலோ ரூ.300க்கும், சம்பங்கி 1 கிலோ ரூ.80க்கும்,  கனகாமரம் 1 கிலோ ரூ.700க்கும், பட்டன் ரோஸ் 1 கிலோ ரூ.80க்கும், ரோஸ் 1 கிலோ ரூ.100க்கும், காக்கடா பூ 1 கிலோ ரூ.450க்கும், சாமந்தி 1 கிலோ ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News