செய்திகள்
போலீசார் பறிமுதல் செய்த மணலை படத்தில் காணலாம்

வேளாங்கண்ணி அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள மணலை பதுக்கிய திமுக பிரமுகர்

Published On 2018-11-02 16:36 GMT   |   Update On 2018-11-02 16:36 GMT
வேளாங்கண்ணி அருகே சட்டத்திற்கு விரோதமாக மணல் பதுக்கியது குறித்து திமுக பிரமுகர் மகனை கைது செய்த போலீசார் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த சுக்கானூர் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக அளவுக்கு அதிகமான மணல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சட்டத்திற்கு விரோதமாக மணல் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து ஒரே இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1000 யூனிட் மணலை போலீசார் கைப்பற்றினர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றிய மணலின் மதிப்பு சுமார் ரூ.80 லட்சம் என கூறப்படுகிறது.

விசாரணையில் மணல் கடத்தலில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் சுக்கானூர் பாலு மற்றும் அவரது மகன் நவநீதகிருஷ்ணன் என்பது தெரிவந்தது. இதையடுத்து போலீசார் நவநீதகிருஷ்ணனை கைது செய்தனர். தப்பியோடிய பாலுவை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட மணலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News