செய்திகள்

ஊதிய உயர்வு கோரி பிஎஸ்என்எல் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

Published On 2018-10-30 21:47 IST   |   Update On 2018-10-30 21:47:00 IST
15 சதவீதம் உயர்வுடன் கூடிய ஊதிய மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். #BSNLemployees
தஞ்சாவூர்:

தஞ்சையில் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் இன்று நடைபெற்றது. தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உதயன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

15 சதவீதம் உயர்வுடன் கூடிய ஊதிய மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதேபோல் ஊதிய உயர்வு தாமதப்படுத்துவதை கண்டித்து கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பாக தஞ்சை மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். நகர கூட்டுறவு வங்கி பொது செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். தஞ்சை மண்டல மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் முத்துவேல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #BSNLemployees
Tags:    

Similar News