செய்திகள்

கே.கே.நகரில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.14 லட்சம் கொள்ளை - வேலைக்கார பெண் கைது

Published On 2018-10-28 07:35 GMT   |   Update On 2018-10-28 07:35 GMT
சென்னை கே.கே.நகரில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.14 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். #Moneyrobbery
போரூர்:

சென்னை கே.கே.நகர் அழகிரிசாமி சாலையை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 48). தொழில் அதிபரான இவர் ஈக்காட்டுதாங்கல் பகுதியில் காற்றாலை உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

சென்னியப்பன் வீட்டில் கடந்த 4 வருடங்களாக வேலைக்கார பெண்ணாக பணியாற்றி வருபவர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த அம்மு (38) சென்னியப்பன் நம்பிக்கையின் பேரில் வீட்டு சாவியை அம்முவிடம் கொடுத்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் வீட்டு பீரோவில் வைத்து இருந்த பணத்தில் ரூ.14 லட்சம் காணாமல் போனது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சென்னியப்பன் கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் பால முரளி வழக்குப்பதிவு செய்து வேலைக்கார பெண் அம்முவை கைது செய்தார். விசாரணையில் அம்மு பீரோவில் இருந்து சிறுக சிறுக பணத்தை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Moneyrobbery

Tags:    

Similar News