செய்திகள்

மதச்சடங்குகளில் தலையிடுவதில் மதச்சார்பற்ற நீதிமன்றங்களுக்கு சுயகட்டுப்பாடு தேவை - உயர்நீதிமன்றம்

Published On 2018-10-20 06:36 GMT   |   Update On 2018-10-20 06:36 GMT
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 12-வது பீடாதிபதியாக யமுனாச்சாரியார் பொறுப்பேற்க தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #ChennaiHC
சென்னை:

திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோவில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 11-வது மடாதிபதி சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தை அடுத்து 12-வது மடாதிபதியாக யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலை வெங்கடவரதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவரது மனுவில், 11-வது மடாதிபதி தான் இறப்பதற்கு முன்னால் அடுத்த மடாதிபதியாக 3 பேரை தேர்வு செய்து இருந்ததாக உயிலில் குறிப்பிட்டிருப்பதாகவும், அந்த மூவரில் இல்லாத யமுனாச்சாரியாரை நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், யமுனாச்சாரியாரின் நியமனத்தை ரத்து செய்ய முடியாது என தீர்ப்பளித்துள்ளது. மேலும், மதச்சார்பற்ற நீதிமன்றம் மதச்சடங்குகளில் தலையிடுவதில் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். #ChennaiHC
Tags:    

Similar News