செய்திகள்

ஆயுதபூஜையை முன்னிட்டு வத்தலக்குண்டு மார்க்கெட்டில் வாழைக்காய், இலைக்கு கிராக்கி

Published On 2018-10-16 15:55 IST   |   Update On 2018-10-16 15:55:00 IST
வத்தலக்குண்டுவில் கடந்த சில வாரங்களாக மந்தமாக இருந்த வாழைத்தார் விற்பனை ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று சூடுபிடிக்கத் தொடங்கியது.
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டுவில் ஆயுதபூஜையை முன்னிட்டு வாழைத்தார் மற்றும் வாழை இலை அதிக அளவில் விற்பனைக்கு வந்தது.

வத்தலக்குண்டு - மதுரை ரோட்டில் வாழைத்தார் கமி‌ஷன் மண்டி உள்ளது. வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் இங்கு வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

வியாபாரிகள் மூலம் வாங்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த சில வாரங்களாக மந்தமாக இருந்த வாழைத்தார் விற்பனை ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று சூடுபிடிக்கத் தொடங்கியது.

விலையும் கூடுதலாக கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வத்தலக்குண்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இதனை வாங்குவதற்காக அதிக அளவில் வந்திருந்தனர்.

இதே போல் வத்தலக்குண்டு - மதுரை ரோட்டில் தினசரி வாழை இலை மார்க்கெட் உள்ளது. இங்கும் ஆயுத பூஜையை முன்னிட்டு அதிக அளவில் வாழை இலை கொண்டு வரப்பட்டது. ஏலத்தில் எதிர்பார்த்த விலையை விட கூடுதல் விலை கிடைத்தது.

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் வீடுகளிலும், அவலலுகங்களிலும், கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக வாழை இலை மற்றும் வாழைப் பழங்களின் தேவை அதிகரிப்பால் விற்பனையும் சூடுபிடித்தது.

திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட மாவட்டங்களின் பல்வேறு பகுதகளில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News