செய்திகள்

ராஜஸ்தான் வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி- 2 பேருக்கு வலைவீச்சு

Published On 2018-10-12 10:50 GMT   |   Update On 2018-10-12 10:50 GMT
ஐ.ஓ.சி.யில் மண்எண்ணை வாங்கி தருவதாக ராஜஸ்தான் வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை:

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் பாபுலால் (38). கடந்த 4 மாதம் முன்பு திருப்பதி சென்றபோது அங்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஜய் என்பவரிடம் அறிமுகம் ஏற்பட்டது.

இருவரும் சந்தித்து பேசியபோது அஜய், மண்எண்ணை வியாபாரம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தங்கள் தொழிலுக்கு சென்னையில் மண்எண்ணை வாங்கி தருவதாகவும், தனக்கு எண்ணை நிறுவன அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் பாபுலால் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் கடந்த 9-ந்தேதி அஜய் ராஜஸ்தானில் இருந்து நண்பர் யோகேஷ் என்பவருடம் சென்னை வந்து பெரிய மேட்டில் அறை எடுத்து தங்கினார்.

பாபுலாலை தொடர்பு கொண்டு பேசினார். அவரே சிக்கந்தர் என்பவருடன் அஜய்யை சந்தித்து மண்எண்ணை வாங்கி தருவதாக கூறி இருவரும் தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ஒரு ஆட்டோவில் அழைத்து சென்றார்.

கேட் அருகில் ஆட்டோவை நிறுத்த கூறியஅவர் ரூ.5 லட்சத்தை அஜயிடம் பெற்றுக்கொண்டு எண்ணை நிறுவனத்தில் கட்டிவிட்டு வருவதாகவும் மற்றொரு கேட் அருகில் காத்து நிற்கும்படி கூறி பாபுலால் இறங்கி விட்டார்.

சிறிது நேரத்தில் அவர் நண்பர் சிக்கந்தருக்கு போன் செய்து தான் பின்னால் மற்றொரு ஆட்டோவில் வருவதாக கூறி அவர்களிடம் இறங்கி தப்பி வந்துவிடு என்று கூறியுள்ளார். அதன்படி அஜய் ஆட்டோவில் சென்ற சிக்கந்தர் இறங்கி பின்னால் வந்த பாபுலால் ஆட்டோவில் ஏறி இருவரும் தப்பி சென்றனர்.

பணத்தை இழந்த அஜய் தண்டையார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் பாபுலால், சிக்கந்தர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News