செய்திகள்

புழல் சிறையில் இருந்து ஜாமீன் கடிதத்தில் பெயரை மாற்றி தப்பிய கைதி

Published On 2018-10-12 10:28 GMT   |   Update On 2018-10-12 10:28 GMT
புழல் சிறையில் உள்ள கைதி ஒருவரை ஜாமீனில் விடுவிப்பதற்காக வந்த கடிதத்தில் முகமதுஷெரீப் தனது பெயரை மாற்றி தப்பியது தற்போது தெரியவந்துள்ளது. #PuzhalJail
சென்னை:

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் முகமதுஷெரீப் (வயது 27). வீடு புகுந்து திருடிய வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி முகமது ஷெரீப்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டான்.

புழல் சிறையில் உள்ள ஜெயிலர் மற்றும் சப்-ஜெயிலரிடம் முகமது ஷெரீப் நன்றாக பழகினான். இதனால் அவனை உதவியாளர் போல அதிகாரிகள் வேலை வாங்கினர்.

இந்த நிலையில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதியை ஜாமீனில் விடுவிப்பதற்கான கடிதம் கடந்த 4-ந்தேதி ஜெயிலுக்கு வந்தது. அந்த கடிதத்தை முகமது ஷெரீப் வாங்கி அதிகாரிகளிடம் கொடுக்க சென்றார்.

திடீரென்று முகமது ஷெரீப் கடிதத்தின் உறையில் இருந்த பெயரை நீக்கி தனது பெயரை மாற்றி எழுதி தன்னை ஜாமீனில் விட கடிதம் வந்துள்ளதாக அதிகாரிகளிடம் கொடுத்தான். அதிகாரிகளும் அதை சரியாக கவனிக்காமல் முகமது ஷெரீப்பை கடந்த 5-ந்தேதி வெளியே விட்டு விட்டனர்.

இந்த நிலையில் முகமது ஷெரீப்பை ஜாமீனில் விடுவதற்கான கடிதம் ஜெயிலுக்கு வந்தது. அதன் பிறகே வேறொருவருக்கு வாங்கிய ஜாமீனில் முகமது ஷெரீப் தனது பெயரை மாற்றி தப்பியது தெரியவந்தது. இதனால் ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டது. #PuzhalJail

Tags:    

Similar News