செய்திகள்

பாரம்பரிய உணவு வகைகளை பாதுகாக்க வேண்டும் - துணை ஜனாதிபதி வேண்டுகோள்

Published On 2018-10-10 06:39 GMT   |   Update On 2018-10-10 06:39 GMT
பாரம்பரிய உணவு வகைகளை பாதுகாக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். #VenkaiahNaidu #TraditionalFoods
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாசியில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

மகாத்மா காந்தி சொன்னதுபோல் மக்கள் கிராமங்களை நோக்கி செல்ல வேண்டும். இதற்காக, அரசு திட்டங்களில் கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாம் பழமையான, சத்தான தானிய வளங்களை மறந்து வருகிறோம். பாரம்பரிய உணவு வகைளை பாதுகாக்க வேண்டும்.



பிற மொழிகள் கண்ணாடி போன்றது, தமிழ் மொழி கண்கள் போன்றது. பெண்கள் முன்னேற்றத்தை அரசு மட்டுமே சாத்தியப்படுத்த முடியாது. இரு சிறகுகள் இருந்தால்தான் பறக்க முடியம்.

நாட்டில் இப்போது கருப்புப் பணப் புழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. நான் கட்சி அரசியலில் இருந்து விலகிவிட்டாலும் மக்கள் சேவையில் இருந்து விலகவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். #VenkaiahNaidu #TraditionalFoods

Tags:    

Similar News