செய்திகள்

போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை- அதிகாரி எச்சரிக்கை

Published On 2018-10-09 09:47 GMT   |   Update On 2018-10-09 09:47 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை துணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் நோய் தடுப்புத்துறை சார்பில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளுக்கான உதடு மற்றும் அன்னப்பிளவு சிகிச்சை முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ராமசந்திரன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் கடந்த மாதம் 658 பிரசவங்கள் நடைபெற்றன. ஒரே மாதத்தில் இவ்வளவு பிரசவங்கள் நடைபெறுவது மாநிலத்தியே இதுதான் முதல் முறை. ஒரே மாதத்தில் 658 பிரசவங்கள் பார்த்து திருவள்ளூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம். அப்படி சிகிச்சை பெற்றால் உயிரிழப்பு ஆபத்து உள்ளது. போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
Tags:    

Similar News