செய்திகள்

துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ரூபாய் பணம் புரண்டுள்ளது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

Published On 2018-10-06 06:23 GMT   |   Update On 2018-10-06 08:47 GMT
துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ரூபாய் பணம் புரண்டுள்ளதாகவும் இது தனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். #BanwarilalPurohit #ViceChancellors
சென்னை:

சென்னை தி.நகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-



தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பலகோடி ரூபாய் பணம் புரண்டுள்ளது. பல கோடி ரூபாய் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங்கப்பட்டது. துணைவேந்தர் நியமனத்தில்  முறைகேடு நடந்ததைக் கண்டு நான் வருத்தமடைந்து, அதை மாற்ற நினைத்தேன். தகுதி அடிப்படையில்தான் துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டும். இதுவரை 9 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்துள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஆளுநரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #BanwarilalPurohit #ViceChancellors
Tags:    

Similar News