செய்திகள்

ராமேசுவரம்-பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது

Published On 2018-10-03 04:27 GMT   |   Update On 2018-10-03 04:27 GMT
டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் மீனவர்கள் தொடங்கி உள்ளனர். #Fishermenstrike #Fishermen

ராமேசுவரம்:

டீசல் விலையை குறைக்க வேண்டும், இலங்கை சிறையில் வாழும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழக மீனவர் சங்க செயலாளர் சேசுராஜா தலைமையில் கடந்த 30-ந் தேதி நடந்த கூட்டத்தில் 3-ந் தேதி போராட்டத்தை தொடங்கவும் திட்டமிடப்பட்டது.

அதன்படி இன்று ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். இதனால் 6 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல வில்லை.


இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க நிதி உதவி வழங்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றப்படா விட்டால் 8-ந் தேதி உண்ணாவிரதம் இருப்பது என்றும் மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #Fishermenstrike #Fishermen

Tags:    

Similar News