செய்திகள்

திருவள்ளூர் கோர்ட்டு முன்பு மகனுடன் தாய் தர்ணா

Published On 2018-09-26 09:37 GMT   |   Update On 2018-09-26 09:37 GMT
ஜீவனாம்சம் பணத்தை கணவர் வழங்காததால் திருவள்ளூர் கோர்ட்டு முன்பு மகனுடன் 2-வது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர்:

வேப்பம்பட்டை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் முதல் திருமணத்தை மறைத்து வேலூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியை சேர்ந்த மணிமேகலையை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வேல்முருகன் என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் மகேந்திரனின் 2-வது திருமணம் பற்றி அறிந்ததும் அவரது முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து மணிமேகலை தனது மகனுடன் நெமிலிச்சேரியில் தனியாக வசித்து வருகிறார். மேலும் ஏமாற்றி திருமணம் செய்ததாக கணவர் மகேந்திரன் மீது போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ரூ.3 லட்சம் ஜீவனாம்சம் தொகையை மணிமேகலைக்கு, மகேந்திரன் வழங்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால் இதுவரை மணிமேகலைக்கு ஜீவனாம்சம் தொகை வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை இன்று காலை மகன் வேல்முருகனுடன் திருவள்ளூர் கோர்ட்டுக்கு வந்தார். திடீரென இருவரும் கோர்ட்டு வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். #TiruvallurCourt
Tags:    

Similar News