செய்திகள்

தமிழக ஆளுநருடன் எச்.ராஜா திடீர் சந்திப்பு - அரைமணி நேரம் பேசியதாக தகவல்

Published On 2018-09-25 15:04 IST   |   Update On 2018-09-25 15:04:00 IST
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று சந்தித்து பேசினார். #HRaja #Governor #BJP
சென்னை:

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமீபத்தில் புதுக்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தின்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் போலீசாரையும், நீதிமன்றத்தையும் நேரடியாகவே திட்டினார்.

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் மீது சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது.



தனிப்படை போலீசார் எச்.ராஜாவை தேடி வரும் நிலையில், அவர் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். ராஜ்பவனில் நடந்த இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விவரம் குறித்து தகவல் வெளியாகவில்லை. #HRaja #Governor #BJP
Tags:    

Similar News