செய்திகள்

பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் போலீஸ் நிலையம்

Published On 2018-09-22 16:10 GMT   |   Update On 2018-09-22 16:10 GMT
நயினார்கோவிலில் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் போலீஸ்நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
நயினார்கோவில்:

பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வளர்ந்து நகரமான நயினார்கோவில் போலீஸ் நிலையம் மிகவும் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

போலீஸ்நிலைய கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனேயே போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்த கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகள் இடிந்து விழுந்துள்ளதால், தற்போது இங்குள்ள கணினி அறையில் தான் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.

ஒரே அறையில் போலீஸ் நிலையம் செயல்படுவதால், ஆவணங்கள் வைக்கவும், அதிகாரிகள் அமர்ந்து குற்றங்களை விசாரிக்கவும் முடியாமல் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் கைதிகளை விசாரிக்கவும், அடைத்து வைக்கவும் பாதுகாப்பான அறைகள் இல்லாமல் உள்ளது. 26 போலீசார் பணியாற்றும் இந்த போலீஸ் நிலையத்தில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

எனவே இந்த போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News