செய்திகள்

நீர்ப்பாசன துறைக்கு தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும் - நல்லசாமி

Published On 2018-09-21 04:46 GMT   |   Update On 2018-09-21 04:46 GMT
கர்நாடகத்தில் உள்ளது போல தமிழகத்திலும், நீர்ப்பாசன துறைக்கு தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார். #KarnatakaIrrigationsector #Minsiter

அரூர்:

தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எத்தனாலை மாற்று எரிபொருளாக பயன்படுத்த வேண்டும். கேரளா, கர்நாடகாவில் உள்ளது போல தமிழகத்தில் நீர்ப்பாசன துறைக்கு தனியாக அமைச்சர்களை நியமிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் பனங்கொட்டைகளை நடவு செய்ய வேண்டும்.

ரே‌ஷன் கடைகளில், வெள்ளை சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி, வெல்லத்தை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். தமிழகத்தில் நிலவும் வறட்சியால், குடிநீரை மக்கள் விலைக்கு வாங்கி வருகின்றனர். வருகிற பட்ஜெட்டில், நீர்ப் பாசனத்துக்கு, தமிழக அரசு முழு நிதியையும் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaIrrigationsector #Minsiter

Tags:    

Similar News