செய்திகள்

கருணாசின் அவதூறு பேச்சுக்கு என்.ஆர்.தனபாலன்- நாராயணன் கண்டனம்

Published On 2018-09-20 16:02 IST   |   Update On 2018-09-20 16:02:00 IST
நடிகர் கருணாசின் அவதூறு பேச்சுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் சமத்துவ மக்கள் கழக தலைவர் நாராயணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #actorkarunas

சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் கருணாஸ் நாடார் சமுதாயத்தை இழிவாகவும், கேவலமாகவும், தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

அமைதியாக வாழ்ந்து வரும் நாடார் சமுதாய மக்களை சீண்டி பார்க்க ஆசைப்படுகிறாரா? அமைதியையே விரும்பும் நாடார் சமுதாய மக்களை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம்” என்று கூறி உள்ளார்.


சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில், “பொது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கருணாஸ் பத்திரிகை நடத்தும் நாடார் சமுதாயத்தை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளது கண்டனத்திற்குறியது. பணத்திற்காக எதையும் செய்பவர்கள் என்று பொதுமக்களிடையே ஜாதி துவே‌ஷத்தை தூண்டும் இவ்வித பேச்சுக்களை கருணாஸ் தவிர்க்க வேண்டும்” என்று கூறி உள்ளார். #actorkarunas

Tags:    

Similar News