செய்திகள்

திருத்தங்கலில் விநாயகர் சிலை ஊர்வலம்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

Published On 2018-09-14 13:09 GMT   |   Update On 2018-09-14 13:09 GMT
சிவகாசி அருகே திருத்தங்கலில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். #RajendraBalaji #ADMK
சிவகாசி:

நாடு முழுவதிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கலில் தேவர் உறவின் முறை சார்பாக 6-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாதார தனைகள் நடைபெற்றது. பின்னர் ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிவழியாக ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் பொன் சக்திவேல், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, ஜெயலலிதாபேரவை நகர செயலாளார் ரமணா, கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராஜவர்மன், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன்.

சிவகாசி இளைஞர் பாசறை சங்கர், ஸ்ரீவில்லிபுத்தூர் இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருத்தங்கல் தேவர் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விநாயகர் பக்தர் பேரவை சார்பாக 24-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு பொறுப்பாளர் குருசாமி தலைமை தாங்கினார். தொழிலதிபர் சீனிவாசன், துணைத்தலைவர்கள் கலைவாணன், ஆட்டோகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மாரியப்பன் ஆகியோர் வரவேற்றார்.

ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா தொடங்கி வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜூவா, கேசவ ராமசந்திரன் நிர்வாகிகள் அழகேச பாண்டியன், சுரேஷ், முருகவேல், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையத்தில் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.

மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமை தாங்கினார்.

காவல் நிலையம் அருகே தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் அலங்கார யானை முன்னே செல்ல ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், டிராக்டர் ஓட்டும் விநாயகர் என பல்வேறு உருவங்கள் கொண்ட விநாயகர் சிலைகள் எடுத்து செல்லப்பட்டன. ஊர்வலம் முடிந்ததும். ஐ.என்.டி.யூ.சி.நகர் அருகே உள்ள குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. #RajendraBalaji #ADMK
Tags:    

Similar News