செய்திகள்

சேலத்தில் கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-12 10:36 GMT   |   Update On 2018-09-12 10:36 GMT
சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலையில் வகுப்பை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு நின்று பல்வேறு கோரிக்கைகளை வலுயுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:

சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலையில் வகுப்பை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு நின்று பல்வேறு கோரிக்கைகளை வலுயுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள், கல்லூரியில் கழிப்பிட வசதி அமைத்து தர வேண்டும்.

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். இலவச பஸ் பயண அட்டை மற்றும் தரமான கல்வியை வழங்கிட வேண்டும். அரசாணை 92-யை முழுமையாக அமல்படுத்திட வேண்டும் என கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News