செய்திகள்

மதுரவாயல் அருகே மனைவியுடன் தகராறு - டிரைவர் தற்கொலை

Published On 2018-09-12 14:34 IST   |   Update On 2018-09-12 14:34:00 IST
மதுரவாயல் அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #suicide

போரூர்:

மதுரவாயல் கங்கா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் அந்துவன் கோமஸ்ராஜ் (56) கார் டிரைவர். இவருக்கு குடி பழக்கம் உண்டு. இதனால் மனைவி புஷ்பா மேரியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு குடி போதையில் வீட்டிற்கு வந்த கோமஸ்ராஜ் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பின்னர் தனது அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டார்.

Tags:    

Similar News