செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலையில் டைலர் கடை சூறை- 2 பேருக்கு வலைவீச்சு

Published On 2018-09-11 11:46 GMT   |   Update On 2018-09-11 11:46 GMT
கிழக்கு கடற்கரை சாலையில் டைலர் கடையை சூறையாடிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி:

லாஸ்பேட்டை கம்பளிசாமிமடம் தெருவை சேர்ந்தவர் சுஜாதா (வயது44). கணவரை விட்டு பிரிந்த இவர் கிழக்கு கடற்கரைசாலை லதா ஸ்டீல் அவுஸ் அருகே லட்சுமி நகரில் டைலர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சுனில்குமார். கல்லூரியில் படித்து வரும் இவர் கல்லூரி முடிந்த பின்னர் தாய்க்கு உதவியாக டைலர் கடைடயை கவனித்து வந்தார்.

சம்பவத்தன்று 2 வாலிபர்கள் டைலர் கடை முன்பு நின்று கொண்டு சுஜாதாவை முறைத்து பார்த்தனர். இதனை சுனில்குமார் கண்டித்து தட்டிக்கேட்டார். பிறகு அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் சுஜாதாவும், அவரது மகன் சுணில்குமாரும் டைலர் கடையை மூடுவதற்காக பொருட்களை எடுத்து அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை சுனில்குமார் மீது வீசினர். ஆனால் சுனில்குமார் சுதாரித்து கொண்டு ஒதுங்கி கொண்டதால் அந்த பீர் பாட்டில்கள் டைலர் கடையில் இருந்த ஷோகேஸ் கண்ணாடியில் பட்டு நொறுங்கியது.

பின்னர் அந்த வாலிபர்கள் சுஜாதாவுக்கும், அவரது மகன் சுனில்குமாருக்கும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

இதுகுறித்து சுஜாதா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டைலர் கடையை சூறையாடி கொலைமிரட்டல் விடுத்தவர்கள் லாஸ்பேட்டை சின்னையன்பேட் பகுதியை சேர்ந்த பாரதி மற்றும் அவரது நண்பர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News