செய்திகள்

சோழத்தரம் அருகே சூதாடிய 6 பேர் கைது

Published On 2018-09-11 16:00 IST   |   Update On 2018-09-11 16:00:00 IST
சோழத்தரம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.900 பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம்:

சோழத்தரம் அருகே உள்ள வடக்கு பாளையங்கோட்டையில் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 39), கபில் (26), கலையரசன் (28) உள்ளிட்ட 6 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்த சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சூதாடிய சுந்தர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.900 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News