செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

Published On 2018-09-10 14:06 IST   |   Update On 2018-09-10 14:06:00 IST
சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. #Rupee #Rupeeversusdollar #USdollar
சென்னை:

சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 7-ந்தேதி வர்த்தக நேர இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.71.73 ஆக இருந்தது.

இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 45 காசுகள் சரிந்து ரூ.72.15 ஆக இருந்தது. சிறிது நேரத்தில் மேலும் 3 காசுகள் சரிந்து ரூ.72.18 ஆனது.

இது வரலாறு காணாத சரிவாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 6-ந்தேதி இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.11 என்ற அளவில் இருந்தது. அதுவே உச்சபட்ச சரிவாக இருந்தது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக எண்ணை உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், அமெரிக்க டாலரை அதிகம் வாங்குகின்றனர். டாலரின் தேவை அதிகரித்து வருவதால் ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.

மற்றநாடுகளின் நாணயங்கள் அமெரிக்க டாலரை ஆதரித்து வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் மீண்டும் தீவிரம் அடைந்தால் ரூபாய் மதிப்பு மேலும் சரியும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். #Rupee #Rupeeversusdollar  #USdollar
Tags:    

Similar News