செய்திகள்

ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும் - அமைச்சர் அன்பழகன்

Published On 2018-09-08 14:45 GMT   |   Update On 2018-09-08 14:45 GMT
ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் மாணவர்களின் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். #Ragging #Anbalagan
சென்னை:

சென்னையில் ராகிங் தடுப்புக்குழு ஆய்வுக்கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும்.

ராகிங்கை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராகிங் கண்காணிப்புக் குழு இல்லாத கல்லூரிகளில் குழு அமைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். #Ragging #Anbalagan
Tags:    

Similar News