செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் அரசு பஸ் மீது லாரி மோதல் - சிறுமி உள்பட 6 பேர் காயம்

Published On 2018-09-08 07:33 GMT   |   Update On 2018-09-08 07:33 GMT
கும்மிடிப்பூண்டியில் அரசு பஸ் மீது லாரி மோதலில் சிறுமி உள்பட 6 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

கும்மிடிப்பூண்டி:

கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு தமிழக அரசு பஸ் இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் நடராஜன் ஓட்டினார். கண்டக்டராக நீலகண்டன் இருந்தார். பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக அரசு பஸ் சாலையோரமாக நின்றது. அப்போது சென்னையில் ஆந்திரா நோக்கி சென்ற லாரி ஒன்று அரசு பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த சிறுமி ஆசிப் (8) உள்பட 6 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தி லாரி டிரைவர் தாமோதரனை கைது செய்தனர்.

இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News