செய்திகள்

ஜெயலலிதா மரணம் விசாரணை ஆணையத்துக்கு சென்று ஒரு நிமிடத்தில் திரும்பிய ஜார்ஜ்

Published On 2018-09-06 06:46 GMT   |   Update On 2018-09-06 06:46 GMT
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்த ஜார்ஜ் ஒரு நிமிடத்தில் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. #George #JayaDeathprobe
சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

இதில் சசிகலா- உறவினர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பலருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி விசாரித்து உள்ளது.

இதேபோல் முன்னாள் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜுக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் இன்று ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை ஜார்ஜ் விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்தார். ஆனால் அவரிடம், இன்று ஆஜராக வேண்டியதில்லை என்றும் வேறு தேதியில் ஆஜராகும்படி இ-மெயில் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளதாக விசாரணை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த இ-மெயிலை அவர் பார்க்காததால் ஆஜராக வந்துவிட்டார்.

இதையடுத்து ஜார்ஜ் வந்த வேகத்தில் ஒரு நிமிடத்திலேயே அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.

குட்கா ஊழல் தொடர்பாக ஜார்ஜ் வீட்டில் சி.பி.ஐ. நேற்று விடிய விடிய சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. #George #JayaDeathprobe
Tags:    

Similar News