செய்திகள்
சேலம் அருகே மகள் இறந்த சோகத்தில் தாய் தற்கொலை
சேலம் அருகே மகள் இறந்த சோகத்தில் வீட்டில் தனியாக இருந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொண்டலாம்பட்டி:
சேலம் இரும்பாலை, பெருமாப்பட்டி அருகே உள்ள வெள்ளையங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 35). இவரின் மகள் கிருத்திகா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதை நினைத்து மனவேதனையுடன் இருந்த சின்னபொண்ணு நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்த எஸ்.கொல்லப்பட்டி அருகே உள்ள பட்டமுத்தாம்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சின்னபொண்ணுவின் தந்தை தங்கவேல் (58), இரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.